

சென்னை,
'ஆவின்' நிறுவனத்தை விட தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்வதால் அவர்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். எனவே ஆவின் பால் கொள்முதல் குறைந்து, சப்ளை 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை 'ஆவின்' நிறுவனம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆவின் நிறுவனம், சென்னை முழுவதும் அனைத்து வகை யான பால் பாக்கெட்டுகளையும் தடையின்றி தொடர்ந்து வினி யோகித்து வருகிறது. சராசரியாக சென்னையில் நாளொன்றுக்கு நுகர்வோர்களுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகை யில் 2025 ஜூன் மாதம் அன்றாடம் 14.46 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதம் அன்றாடம் 14.82 லட்சம் லிட்டர் பால் விற்பனை நடைபெறுகிறது. இது 0.36 சதவீதம் அதிகரிப்பு ஆகும். அதாவது, பால் வினியோகம் 36 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது.
எந்தவொரு பால் சப்ளையும் குறைக்கப்படவில்லை. நுகர்வோர்களுக்கு பால் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் ஆவின் நிறுவனம் உறுதியாக உள்ளது. எனவே ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு என்பது தவறான தகவல் ஆகும். ஆவின் பால் வினியோகம் வழக்கம் போல் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.