ஐசரி கணேஷின் தாயார் மறைவு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஐசரி கணேஷின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஐசரி கணேஷின் தாயார் மறைவு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை,

ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா ஐசரி வேலன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'திரைப்பட கலைஞரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மறைந்த ஐசரி வேலனின் துணைவியாரும், கல்வியாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

பாசமிக்க தாயாரை இழந்து வாடும் ஐசரி கணேசுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இத்துயர்மிகு நேரத்தில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com