ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழா; மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பு

மகா சிவராத்திரி விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழா; மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பு
Published on

கோயம்பத்தூர்,

கோவை ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை ஈஷா யோகா மையத்தில் பஞ்சப்பூத ஆராதனையுடன் தொடங்கிய தொடங்கிய விழா விடிய விடிய நடைபெற்றது.

ஆதியோகி சிலைக்கு முன்பாக பல்வேறு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இரவு முழுவதும் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மேடைக்கு வந்து பக்தர்களை உற்சாக படுத்தும் விதமாக நடனமாடினார். மகா சிவராத்திரி விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com