ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி

கவுகாத்தியில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் டெல்லி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி
Published on

சென்னை,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கவுகாத்தியில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் டெல்லி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் ஜோசப் சன்னி 65 மற்றும் 69 நிமிடங்களில் இரண்டு கோல் அடித்தார். முகமது ஐமென் 80-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி. கோவா - ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com