மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள்

மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் முகமது பஷீர் உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள்
Published on

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் முகமது பஷீர், பொதுச்செயலாளர் முகமதுபெய்க் மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதே போன்று ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல்லாஹ் தலைமையில் நிர்வாகிகளும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசிய தலைவர் அசாதுதீன் உசைவி, கட்சியின் மாநில தலைவர் அஹமத் மற்றும் நிர்வாகிகளும், தெலுங்கர் முன்னேற்ற கழகத் தலைவர் புகழ் பாலாஜி நாயுடு தலைமையில் நிர்வாகிகளும், குறிஞ்சி தமிழர் வள்ளி மக்கள் பேரவை தலைவர் எஸ்.எஸ்.ஜெகநாதன் தலைமையில் நிர்வாகிகளும் நேற்று சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எம்.ஜி.ஆர். கழகம் ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டி.ராமலிங்கம் கடிதம் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com