இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்... கவிஞர் வைரமுத்து வேதனை


இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்... கவிஞர் வைரமுத்து வேதனை
x

கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை ஏராளமானோர் கொல்லப்பட்டனா். குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனா். இந்த போரால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனா். இந்த நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர்ப்பதற்றம் குறித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-

இதோ இன்னுமொரு யுத்தம் தாங்குமா?

மண்டை உடைந்துவிடும் மண்ணுருண்டை

இஸ்ரேல் காஸா சாவுச் சத்தம் அடங்குவதற்குள் ரஷ்யா உக்ரைன் ரத்தச் சகதி காய்வதற்குள் இஸ்ரேல் ஈரான் தொடங்கிவிட்டது

சொல்பேச்சுக் கேட்காத இரு நாடுகளால் உலகத்தைச் சூழ்ந்திருக்கின்றன அச்சத்தின் கடலலைகள்

அப்பாவி மனித எலும்புகளை நொறுக்கித் தின்னுகின்றன ஆயுதப் பற்கள்

போர்ச் சங்கிலி என்பது உலகைப் பிணைத்திருக்கிறது

இஸ்ரேல் யுத்தம் மதுரை மல்லிகையில் புகையடிக்கிறது

ஈரான் யுத்தம் ஈரோட்டின் மஞ்சளைக் கரியாக்குகிறது

மில்லி மீட்டர்களில் ஏறும் பொருளாதாரம் மீட்டர் மீட்டராய்ச் சரிகிறது

அணு ஆயுதங்களை மொத்தத்தில் அழிப்பதற்கு உலக நாடுகள் ஒரேமையில் கையொப்பமிடவேண்டும்

போர் வேண்டாம் புன்னகை வேண்டும்

யுத்தமில்லாத பூமி - ஒரு சத்தமில்லாமல் வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story