அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த தயாராகும் இஸ்ரோ


அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த தயாராகும் இஸ்ரோ
x

கோப்புப்படம் 

இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டான எல்.வி.எம்-3 மூலம் 15-ந்தேதி ஏவ திட்டமிட்டுள்ளது.

சென்னை,

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி. நிறுவனம் செல்போன் சேவைக்கான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்-6'என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டான எல்.வி.எம்-3 மூலம் விண்ணில் வருகிற 15-ந்தேதி ஏவ திட்டமிட்டுள்ளது.

இதற்காக செயற்கைக்கோள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு ராக்கெட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அது ஏவுதளத்திற்கு நகர்த்தப்படுவதற்கு முன்பு சில முக்கிய சோதனைகளும் செய்யப்பட உள்ளது. சுமார் 2,400 சதுரஅடி (223 சதுர மீட்டர்) பரப்பளவில் விண்ணில் நிலை நிறுத்தும்.

இந்த செயற்கைக்கோள் புளூபேர்ட் 1 முதல் 5 வரையிலான செயற்கைக்கோளை விட 3.5 மடங்கு பெரியது. அத்துடன் தரவுத்திறனும் அதனை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். குறைந்த-பூமி சுற்றுப்பாதையில் இதுவரை செலுத்தப்பட்ட மிகப்பெரிய தனியார்-கட்டமைக்கப்பட்ட, செல்போன்-இணக்கமான ஆண்டெனாவாக செயல்படும். அமெரிக்கா உரிமம் பெற்ற இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோளாகும். இது வணிக மற்றும் அரசு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story