சந்திரயான்-4 விண்கலத்தை தரையிறக்கும் இடத்தை தேர்வு செய்தது இஸ்ரோ

லேண்டர் 10 டிகிரி வரை சரிவுகளில் தரையிறங்கும் திறன் கொண்டது.
சந்திரயான்-4 விண்கலத்தை தரையிறக்கும் இடத்தை தேர்வு செய்தது இஸ்ரோ
Published on

சென்னை,

நிலவின் தென்துருவத்தில் உள்ள மண் மற்றும் பாறை துண்டுகளை பூமிக்கு கொண்டு வருவதற்காக சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானி கள் ஈடுபட்டுள்ளனர். ரூ.2 ஆயிரத்து 104 கோடி மதிப்பிலான இந்தப் பணிக்காக 2 வெவ்வேறு ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. அதிக எடையை தூக்கி செல்லும் எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் டுகள் வெவ்வேறு சுமைகளை சுமந்து செல்ல உள்ளது.

விண்கலம் விண்ணில் ஏவுவதற்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக, சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுத்திறன் கேமராவிலிருந்து பெறப்பட்ட படங் களின் அடிப்படையில், விஞ்ஞானிகள், நிலவின் தென்துருவத்திலுள்ள 'மோன்ஸ் மவுட்டன்' (எம்.எம்-4) பகுதியை மிகவும் பொருத்தமான தரை யிறங்கும் தளமாக தேர்வு செய்துள்ளனர். 'லீப்னிட்ஸ் பீட்டா' என்று அழைக்கப்பட்ட 'மோன்ஸ் மவுடன்' பகுதி பின்னர் நாசா கணிதவியலாளர் மற்றும் கணினி உருவாக்குனர் மெல்பா ராய் மவுடனின் பெயரிடப்பட்டது.

'மோன்ஸ் மவுட்டன்'என்பது நிலவின் தென் துருவத்திற்கு அருகில் அமைந்துள்ள சுமார் 6 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள ஒரு மலை. இதன் உச்சி பெரும்பாலும் தட்டையானது. இது தரையிறங்குவதற்கு ஏற்றதாக அமைகிறது. இந்த பகுதி நீண்ட நேரம் சூரிய ஒளியைப் பெறுவதுடன், நீர் பனி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. 'மோன்ஸ் மவுட் டன் மலைப் பகுதியில் 4 வெவ்வேறு தரையிறங்கும் தளங்கள் ஆய்வு மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் எம்.எம்-4 தளம் மிகவும் பாதுகாப்பான தாகக் கருதப்பட்டது. இந்த தளத்தில் சராசரி சாய்வு தோராயமாக 5 டிகிரி யாகும். அதே நேரத்தில் லேண்டர் 10 டிகிரி வரை சரிவுகளில் தரையிறங் கும் திறன் கொண்டது.

இப்பகுதியில் பெரிய பாறைகள் குறைவாகவே உள்ளன. பெரும்பாலான பாறைகள் 0.3 மீட்டருக்கும் குறைவானவையாக இருப்பதால் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்க முடியும். அதேபோல் எம்.எம்-4 தளத்தில் 11 முதல் 12 நாட்களுக்கு தொடர்ச்சியான சூரிய ஒளியைப் பெற முடியும். அதேபோல், இந்தப் பகுதியிலிருந்து பூமியுடன் ரேடியோ தொடர்பு தெளி வாக உள்ளது. இது பணியின் போது எந்த பெரிய தொடர்பு சிக்கல் களும் ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் இந்த இடம் தேர்வு செய்யப்பட் டுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com