பெரியார் சிலை அகற்றும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு

பெரியார் சிலை அகற்றும் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
பெரியார் சிலை அகற்றும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு
Published on: 

புதுடெல்லி,

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருக்கண்டியூரில் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அருகே கடந்த 1990-ம் ஆண்டு நிறுவப்பட்ட பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என ராம ரவிக்குமார் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், உரிய அனுமதியின்றி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்திருந்ததாகவும், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை, கோயில் நிலத்தில் நிறுவப்பட்டுள்ள அந்தச் சிலையைப் பாதுகாப்பாக அகற்றி, 4 வாரங்களுக்குள் பொருத்தமான வேறொரு இடத்திற்கு மாற்றுமாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டதுடன், அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

X