யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
Published on

நாகை,

நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

விழாவில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-

முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. ஒரு இரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால் தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது.

இளைஞர்கள் இன்றைக்கு புதிய கட்சிக்கு செல்வதற்கு காரணம் பதவி கிடைக்கும் என்ற நோக்கமே. கொள்கை, லட்சியம் என்பதை நிலையாக கொண்ட கட்சி தி.மு.க.; இக்கட்சிக்கு வரும்போது எந்த அரவணைப்பு வழங்கப்படுகிறதோ? அதே அரவணைப்புடன் கடைசி வரை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com