குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருநங்கையை கரம் பிடித்த ஐ.டி. ஊழியர்

திருநங்கைக்கும், ஐ.டி. ஊழியருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி திருநங்கையை கரம் பிடித்த ஐ.டி. ஊழியர்
Published on

கோபி,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகு தியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது 30). இவர் சென்னையில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்தவர் கயல்விழி (28). திருநங்கையான இவருக்கும், பிரவீன்ராஜுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரவீன்ராஜை அவரது பெற்றோர் சென்னை யில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் அவரை அங்கிருந்து அழைத்து வந்து வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து அறிந்த பிரவீன்ராஜ், கயல்விழியிடம் கூறினர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மனித சட்ட உதவி மையத்தை அணுகினர். அங்கு அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று 2 பேரும் மாலை மாற்றி தாலி கட்டி சுயமரியாதை பதிவு திருமணம் செய்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com