தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை கவர்னர் மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு - ஜோதிமணி

கவர்னர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை கவர்னர் மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு - ஜோதிமணி
Published on

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கவர்னர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால் 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, கவர்னர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?

திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது.

த.வெ.க-வின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவர் கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும் , த.வெ.க தனிப்பெரும் கட்சி தான். தனிப்பெரும் கட்சியின் தலைவரை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரியானது. மோடி, அமித்ஷா அவர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com