பாஜக 47-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தை மீட்டு, தலைநிமிரச் செய்வோம் என்று இந்நன்னாளில் உறுதி ஏற்போம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக 47-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பாரதத் திருநாட்டின் நலனை மட்டும் முதன்மையாகக் கொண்டு, உலகளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் நமது பாஜக, இன்று தேச வளர்ச்சிக்கு பங்காற்றுவதில் 47-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

அன்று டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் வித்திட்ட சிறு விதை, இன்று பாரத தேசத்தின் வளர்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் பாடுபட்டு, பண்பாட்டையும் கலாசாரத்தையும் காக்கும் பல அருந்தலைவர்களை நாட்டுக்கு நல்கி பெரும் விருட்சமாக கம்பீரமாக நிற்கிறது.

நமது பாஜகவின் நிறுவன தினமான இப்புனிதத் திருநாளில் நமது தமிழக பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யவிருப்பது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான அடித்தளத்தை மேலும் வலுவடையச் செய்துள்ளது. "முதலில் தேசம், அடுத்து கட்சி, கடைசியில் தனிநபர் நலன்" என்ற நமது கொள்கையில் உறுதியுடன் நின்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றிப்பெறச் செய்து, தமிழகத்தை மீட்டு, தலைநிமிரச் செய்வோம் என்று இந்நன்னாளில் உறுதி ஏற்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com