கர்ப்பிணிகள், முதியோர்கள் முகக்கவசம் அணிவது நல்லது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைவாக உள்ள ஒமேக்ரான் வகையைச் சேர்ந்தது. தீராத காய்ச்சல், தொண்டை வலி, சளி சரியாகாமல் இருந்தால் மருத்துவமனைக்கு வர வேண்டும். இந்திய அளவிலும், தமிழகத்திலும் தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை.
பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் மாஸ்க் அணியலாம். கர்ப்பிணிகள், முதியோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது." என்றார்.
Related Tags :
Next Story