"அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி" - ஜிகே வாசன்


அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி - ஜிகே வாசன்
x

தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

ஆளும் தி.மு.க அரசு 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள்படி டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கவுமில்லை, மூடப்படவுமில்லை. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விற்பனை பரவலாக அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தபடவில்லை. தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என்று குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. எதிர்கட்சியாக இருந்த போது திமுக முன்னெடுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அன்று அளித்த ஆதரவு இன்று ஏன் இல்லை என்பதுதான் கேள்விக்குரியாக இருக்கிறது.

அரசு ஊழியர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி வருகிறாரர்கள். அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துகொண்டு இருக்கிறது. இவர்கள் ஆட்சியில் பால்விலை உயர்வு. மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு, என்று பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகிறார்கள் .

தமிழக மக்களின் நிலமை இப்படி இருக்க, மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளது, வியப்பாக இருக்கிறது. கடந்த காலங்களில் மக்களுக்கு திமுக அரசு அளித்த வாக்குறிதிகளும் தெரியும், நிறைவேற்றிய வாக்குறுதிகளும் தெரியும்.

ஆகவே தமிழக மக்கள் தெளிவோடு தற்பொழுது தயாராகிவிட்டார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்திற்கு தலைமையில், அ.இ.அ.தி.மு.க தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. வருங்காலம் வளமான தமிழகமாக அமைய பாடுபடுவோம், வெற்றிபெறுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story