‘சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது' - சரத்குமார்

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் போட்டியிட்டால் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.
‘சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது' - சரத்குமார்
Published on

சென்னை,

பா.ஜ.க.வை சேர்ந்த சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்று 2 வாரங்கள் மட்டுமே கடந்த நிலையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பொது பணியை விடுத்து, தங்கள் சுயநலத்திற்காகவும், சுயதேவைக்காகவும் ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது.

மறுதேர்தல் வரும் சூழல் ஏற்பட்டு இவர்கள் மீண்டும் போட்டியிட நேரிட்டால், அந்த சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவையும், ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினரிடம் அபராத தொகையாக வசூல் செய்ய வேண்டும். தொகுதியில் மறுதேர்தல் வரும்போது, இப்படிப்பட்டவர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணித்திட வேண்டும்.”

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com