தேர்தலுக்கு பிறகு த.வெ.க. இருக்குமா என்பது சந்தேகம்தான்: சரத்குமார்


தேர்தலுக்கு பிறகு த.வெ.க. இருக்குமா என்பது சந்தேகம்தான்: சரத்குமார்
x

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் தற்போது 125 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் எந்தவொரு நல்ல திட்டங்களையும் தி.மு.க. வரவேற்பதில்லை என்று நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் திரைப்பட நடிகரும், பா.ஜ.க. தேசிய பொதுக் குழு உறுப்பினருமான சரத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள். நான் போட்டியிடுவதைவிட என்னுடன் பயணித்தவர்கள் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

முந்தைய ஆட்சியின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் தற்போது 125 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் எந்தவொரு நல்ல திட்டங்களையும் தி.மு.க. வரவேற்பதில்லை. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போதையின்போது நிகழ்கின்றன. போதை கலாசாரம் அதிகமாகிவிட்டது.

முதல் முறையாக விஜய் தேர்தலை சந்திக்கவுள்ளார். முதலில் அவர் களத்தில் போட்டியிட வேண்டும். தனது கொள்கை, கோட்பாட்டை தெளிவுபடுத்தாமல் தனி நபரை தாக்கியே பேசுகிறார். அவரது கட்சியை அரசியல் கட்சியாக நான் பார்க்கவில்லை. தேர்தலை சந்தித்த பின்புதான் உண்மை நிலவரம் தெரியவரும். தேர்தலுக்குப் பிறகு அக்கட்சி இருக்குமா, இல்லையா என்பது சந்தேகம்தான்.

தூத்துக்குடி த.வெ.க. நிர்வாகி அஜிதாஆக்னல் நியாயம் கேட்டு விஜய்யின் வாகனம் முன்னால் போராட்டம் நடத்தினார். விஜய் தனது காரை விட்டு இறங்கி சென்று அவரிடம் குறைகளைக் கேட்டிருக்கலாம். இனி நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறுவது அவரது ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நியாயமான முறையில் நடைபெற்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story