மின்வேலிகள் அமைப்பதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மின்வேலிகள் அமைப்பதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Published on

சென்னை,

வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மின்வேலிகள்(பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் அறிவிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி சூரியசக்தி மின் வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த விதிகள், தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின்வேலிகளும், இவ்விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள BIS தரநிலைகளான BIS-302-2-76 (இந்தியா) விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கை செய்யப்பட்ட, காப்புக்காட்டின் வனப் பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் ஏற்கெனவே மின்வேலிகளை அமைத்திருப்பவர்கள், தங்கள் வேலிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com