நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல - நாராயணன் திருப்பதி அறிக்கை

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இல்லாத ஒன்றை இருப்பதாக ஊதி பெரிதாக்கி, நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல என்று தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று பரவலாக பேசப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் முக்கியத்துவம் உள்ள 2 மசோதாக்கள் நிறைவேறி உள்ளன.

அதாவது இன்றைய கால கட்டத்திற்கு மிக அவசியமான, காரணி ஒழுங்குமுறை திருத்த மசோதா', தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொழில் முறை மேலாண்மை மசோதா' என்ற 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல், நடக்காத ஒன்றை நடந்ததாகவும், இல்லாத ஒன்றை இருப்பதாகவும் ஊதி பெரிதாக்கி, நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படாமல், மக்கள் நலன் குறித்த சிந்தனையில்லாமல் பாராளுமன்றத்தில் அமளி ஏற்படுத்திக்கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல. ஆனாலும், பொறுப்புள்ள கட்சியாக பா.ஜ.க. நாட்டு மக்களின் நலன் குறித்த பல்வேறு மசோதாக்களை சட்டமாக்கி நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com