

சென்னை,
தமிழகத்தில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற வகையில் தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர், தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி வருகிறது என்றும் தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுவது நல்லது அல்ல எனவும் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் இதுவரை சட்ட விரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் தமிழகத்தில் உரிமம் பெறப்பட்டு எத்தனை பேருக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், உரிமம் இல்லாமல் துப்பாக்கியை பயன்படுத்தியதாக எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கேட்டனர்.
அதனை தொடர்ந்து குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பது சரியல்ல என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உய்ர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி கெலை, கெள்ளை, நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுபடுகின்றனரா ? நக்ஸல்கள், சமூக விரேதிகளும், ஆயுதங்களை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா ? என சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக தமிழக காவல்துறை பதிலளிக்கமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.