யாருடன் கூட்டணி என்பதே தெரியவில்லை: விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தே.மு.தி.க. நிர்வாகிகள்

கடந்த 6-ந்தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தே.மு.தி.க. இன்னும் அறிவிக்கவில்லை. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பான அறிவிப்பை கடலூரில் ஜனவரி 9-ந்தேதி நடைபெற்ற மாநாட்டில் சொல்வதாக முதலில் கூறினார். ஆனால், அப்போது அறிவிக்கவில்லை. அதன்பிறகு, பிப்ரவரி 3-ந்தேதி நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிப்பதாக தெரிவித்தார். அப்போதும் எதையும் சொல்லவில்லை.

Also Read
சட்டமன்ற தேர்தல் 2026: வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் நடைபயணம்
கோப்புப்படம்

இந்த நிலையில், தே.மு.தி.க. சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 6-ந்தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

Also Read
காரை முற்றுகையிட முயற்சி: அதிமுக நிர்வாகிகள் 9 பேரை பதவி நீக்கம் செய்த எடப்பாடி பழனிசாமி
கோப்புப்படம்

தமிழகத்தில் பொதுத் தொகுதியில் போட்டியிட ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், புதுச்சேரியில் பொதுத் தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

Also Read
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
கோப்புப்படம்

ஆனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கி 4 நாட்கள் ஆன நிலையிலும், நிர்வாகிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இன்று காலை முதல் தே.மு.தி.க. அலுவலகம் காற்று வாங்கியது. விருப்ப மனு கொடுக்க நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். அதை வாங்க யாரும் வரவில்லை. இதனால், கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

"யாருடன் கூட்டணி என்பதே தெரியாத நிலையில், எப்படி விருப்ப மனுவை வாங்க முடியும்" என்று நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com