ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம்; திருநாவுக்கரசர்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம்; திருநாவுக்கரசர்
Published on

சென்னை,

சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன்றில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் பற்றி முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஒரு போதும் வெளிப்படையாக பேசுவதில்லை.

ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் பதவி மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். பிற தலைவர்களை திட்டி பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

எனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும், ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் வரமாட்டார் என கூறினார்.

திருநாவுக்கரசருக்கு பதிலடி தரும் வகையில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் என் மீது வைத்திருக்கும் காதலை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. யார் தலைவராக வர வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். சோனியா காந்தியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திருநாவுக்கரசர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

அதன்பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்துள்ள பதில் பற்றி திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் யாரைத்தான் விமர்சிக்கவில்லை. அவரை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com