பிரதமரை வரவேற்பது நம் கடமை; அரசியல் கருத்தியல் என்பது வேறு - கனிமொழி

பிரதமரை வரவேற்பது நம் கடமை, அரசியல் கருத்தியல் என்பது வேறு என திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.
பிரதமரை வரவேற்பது நம் கடமை; அரசியல் கருத்தியல் என்பது வேறு - கனிமொழி
Published on

சென்னை,

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியுதவியுடன், இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.

இந்தநிலையில் கல்லூரிகளை திறந்து விக்க ஜனவரி 12 ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக சார்பில் நடைபெறும் மோடி பொங்கல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த விழாவுக்காக பாஜக சார்பில், மாநில அளவில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் திமுக எம்.பி., கனிமொழி கூறியதாவது:-

மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒரு போதும் ஆதரிக்காது. மாநில திட்டங்களை தொடங்குவதற்காக தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது நம் கடமை; அரசியல் கருத்தியல் என்பது வேறு எனக்கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com