புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசுவது வேதனையாக உள்ளது; தமிழிசை சவுந்தரராஜன்

புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசுவது வேதனையாக உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசுவது வேதனையாக உள்ளது; தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் துணை ராணுவ வீரர்கள் கடந்த வியாழ கிழமை 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்பொழுது, புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசுவது வேதனையாக உள்ளது என கூறினார். புல்வாமா தாக்குதல் சம்பவம் காரணமாக பா.ஜ.க. நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com