

சென்னை,
சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவரிடம், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., "செஸ் ஒலிம்பியாட் என்பது இந்தியாவிற்கு கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி, அது தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட பிரதமரை முதல்-அமைச்சர் வரவேற்றுள்ளார். இதற்கும் கட்சி கூட்டணிக்கும் முடிச்சு போடுவது அர்த்தமற்றது" என்று தெரிவித்தார்.