

தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தென்தாரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- பதவியில் இருந்த ஒரு கட்சியில் இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடுவது வெட்கக்கேடானது. இவர்கள் மக்க ளுக்கு உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. வாக்காளர்கள் த.வெ.க. வேட் பாளர் வாக்கு சேகரிக்கும் போது காட்டும் எதிர்ப்பை வாக்குப்பதிவு நாளன்று காட்ட வேண்டும். த.வெ.க. அரசின் அனைத்து அறிவிப்புகளும் வெற்று அறிவிப்புகளாக உள்ளன. கடன் சுமை உள்ள தமிழகத்தில் எப்படி இலவச திட்டங் களை நிறைவேற்ற முடியும்? என தேர்தலுக்கு முன்பு தெரியாதா?
அரசுக்கு வருவாய் வருவதை இலவசமாக அறிவித்து விட்டால் எப்படி நிர்வாகம் பண்ண முடியும். நா.த.க.வை பொறுத்தவரை இலவசம் என்பது கிடையாது என தெளிவாக உள்ளோம். மின்சாரம் இல்லாத போது எதற்கு இலவச மின்சாரம். 200 யூனிட் மின்சாரம் இலவசம் என கையெழுத்து போட்ட பிறகு தான் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நா.த.க. ஆட்சியில் இலவச மின்சாரம் கிடையாது. ஆனால் தடையற்ற மின்சாரம் தருவோம்.
சத்தியபாமாவில் சத்தியம் எங்குள்ளது. சாவித்திரி நடிப்பையும், தம்பி விஜய் நடிப்பையும் வேட்பாளர் சத்தியபாமா மிஞ்சிவிட்டார். இன்னும் த.வெ.க.-தி.மு.க. என பேசி வருகிறார். த.வெ.க. அரசு செயல்படுத்தும் திட்டங்களை சொல்ல வேண்டும். ஆனால் சொல்வதற்கு தான் ஒன்றுமில்லை. ஆட்சி மாறி இருக்கிறது. ஆள் மாறி இருக்கிறது. ஆனால் ஆட்சி முறை மாறவில்லை.
விஜய் என்ன வேஷம் போடுகிறார் என அவருக்கே தெரியவில்லை.வறண்ட நிலத்திற்கு ஒரு மழைத்துளி போல நா.த.க.வுக்கு தேவை ஒரு வெற்றி.தாராபுரம் மக்கள் தன்மானமுள்ள மக்கள் என காட்டுங்கள். விலகிய பதவி உங்களுக்கு இல்லை என காட்டுங்கள். இன்னும் சிலர் கட்சி மாற உள்ள னர். இரண்டு தொகுதியிலும் த.வெ.க. தோற்றால்தான் கட்சி மாற உள்ளவர்களுக்கு பாடமாக அமையும். இப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதிலேயே அதிகம் கொடுப்பது த.வெ.க. தான்.இவ்வாறு அவர் பேசினார்.