‘இளைஞர்கள் மத்தியில் த.வெ.க. தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான்’ - ராஜேந்திர பாலாஜி

வடநாட்டு பத்திரிகையாளர்கள் எடுக்கின்ற கருத்து கணிப்புகள் எல்லாம் தவறானது என ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
‘இளைஞர்கள் மத்தியில் த.வெ.க. தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான்’ - ராஜேந்திர பாலாஜி
Published on

விருதுநகர்,

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இளைஞர்கள் மத்தியில் த.வெ.க. கட்சி ஒரு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு தாக்கம் இல்லாத காரணத்தினால், அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். தி.மு.க. அதற்கு அடுத்த இடத்தைப் பிடிக்கும்.

2016 தேர்தலின்போது எல்லா கருத்து கணிப்புகளிலும் தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன? அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆகவே வடநாட்டு பத்திரிகையாளர்கள் எங்கோ இருந்து கொண்டு எடுக்கின்ற கருத்து கணிப்புகள் எல்லாம் தவறானது.

ஓட்டு போட்ட மக்கள் அத்தனை பேரிடமும் சென்று கேட்டார்களா? ஊடங்களுக்கு ஒரு மூன்று நாட்கள் அது ஒரு தீணி, அவ்வளவுதான். அப்படித்தான் அதை பார்க்க வேண்டும். அது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்காது. மாற்றம் என்பது மக்களிடத்தில் உருவாகி இருக்கிறது. அது சத்தமில்லாமல் ஓட்டுக்களாக இரட்டை இலைக்கு பதிவாகி இருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com