பேனாவை மக்கள் வரி பணத்தில் வைப்பது தவறு- நடிகர் விஜயபிரபாகரன் பேட்டி

திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது தப்பான விஷயம் ஆகும் என்று விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
பேனாவை மக்கள் வரி பணத்தில் வைப்பது தவறு- நடிகர் விஜயபிரபாகரன் பேட்டி
Published on

குன்னூர்,

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் நடிகருமான விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஈரோடு தொகுதியில் ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் அதே தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் தேமுதிக தைரியமாக களத்தில் இறங்கியுள்ளோம். வெற்றிக்கு என்ன வியூகம் உள்ளதோ தேமுதிக தொண்டர்கள் களத்தில் இறங்கி வெற்றிக்கு பாடுபடுவார்கள். வேட்பாளர் ஆனந்த் இளம் வேட்பாளர், மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது.

திமுக வைத்துள்ள பேனா சின்னம் குறித்து முதல் அறிக்கை தந்தது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான். திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது தப்பான விஷயம் ஆகும்.

மேற்கண்டவாறு விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com