கார்த்தி சிதம்பரம் வீட்டில் வருமான வரி துறை சோதனை நிறைவு: எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்

கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடந்த வருமான வரி துறை சோதனை நிறைவடைந்தது என்றும் அதில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். #ITRaid #TamilNews
கார்த்தி சிதம்பரம் வீட்டில் வருமான வரி துறை சோதனை நிறைவு: எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்
Published on

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் ஏர்செல் மேக்சிஸ் பணமுறைகேடு வழக்கில் இன்று காலை 7.30 மணியளவில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 6 வருமான வரி துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அவரது வீட்டில் நடந்த வருமான வரி துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இதனை அடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.

அமலாக்க துறை கூடுதல் இயக்குநர் உத்தரவின்பேரில் நடந்த இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறியுள்ளார்.

#KarthiChidambaram | #ITraid | #Incometaxraid

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com