தமிழ்நாட்டில் 9–ந்தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் வானிலை அதிகாரி தகவல்

வெப்பச்சலனம் காரணமாக 9–ந்தேதி வரை தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் மேக மூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும்.
தமிழ்நாட்டில் 9–ந்தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் வானிலை அதிகாரி தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மைய ஆய்வு அதிகாரி கூறியதாவது:

வெப்பச்சலனம் காரணமாக 9ந்தேதி வரை தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் மேக மூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:

சென்னை டி.ஜி.பி. அலுவலகம், எண்ணூர் தலா 4 செ.மீ., புழல், தேவலா, செங்குன்றம், சோழவரம், காட்டுக்குப்பம் தலா 3 செ.மீ., செங்கல்பட்டு, திருச்சுழி, தாமரைப்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம், காஞ்சீபுரம், கேளம்பாக்கம், சத்யபாமா பல்கலைக்கழகம், திருவள்ளூர் தலா 2 செ.மீ., பள்ளிப்பட்டு, பூண்டி, அண்ணாபல்கலைக்கழகம், திருச்செங்கோடு, தாம்பரம், ஏற்காடு, தளி, அருப்புக்கோட்டை, தரமணி, கூடலூர் பஜார், குமாரப்பாளையம், சென்னை விமானநிலையம், பொன்னேரி, காவேரிப்பாக்கம் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com