பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான்- எடப்பாடி பழனிசாமி

பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே தி.மு.க. ஆட்சி நடக்க்கிறது என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தும் சட்டத்தை 20.02.2016 அன்று நிறைவேற்றியது ஜெயலலிதாவின் அரசு. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு சட்டத்தில் கூட வாய் கூசாமல் பச்சைப்பொய்யை தி.மு.க. சொல்கிறது என்றால், இவர்கள் கோயபல்ஸையே மிஞ்சிவிட்டனர்!

பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே நடக்கும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு, இந்த பச்சைப்பொய்யும் சாட்சி! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com