மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை: முத்தரசன்


மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை: முத்தரசன்
x
தினத்தந்தி 26 March 2025 11:22 AM IST (Updated: 26 March 2025 11:48 AM IST)
t-max-icont-min-icon

இயக்குநர் பணியிலும் முன்னேறி வந்த மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள செய்தி அறிக்கை.

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி (வயது 48) நேற்று (25.03.2025) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். கடந்த 1999ம் ஆண்டு தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான மனோஜ் பாரதி தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் பணியிலும் முன்னேறி வந்த மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

முதுமை காலத்தில் கலங்கி நிற்கும் பாரதிராஜா ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத துயரமாகும். அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story