சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு வாரங்கள் ஆகும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

மழைநீர் வடிகால் பணிகளுக்கு பொதுவாக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு வாரங்கள் ஆகும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி
Published on

நெல்லை,

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஓரிரு வாரங்கள் தேவைப்படும். மீட்பு பணியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பணியாளர்கள் தீவிரமாக பணி செய்து வருகின்றனர். முதல்-அமைச்சர் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதாக சொன்னால் அனைத்து எம்.எல்.ஏக்களும் கொடுத்து விடுவார்கள்.நானும் எனது ஒரு மாத சம்பளத்தை கொடுக்கிறேன்.

மழைநீர் வடிகால் பணிகளுக்கு பொதுவாக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லக்கூடாது. மக்களையும் வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவிக்கு அழைத்ததில் தவறில்லை. அரசை வெள்ள தடுப்பு பணிகளில் செய்த செயலை விமர்சனம் செய்தால் அங்கு பணி செய்யும் அதிகாரிகளின் பணிகளை கொச்சைப்படுத்துவதைபோல் உள்ளது. ரூ.4 ஆயிரம் கோடி பணத்தினை செலவு செய்ததால் தான் மழையால் சேர்ந்த நீர் உடனடியாக வடிந்துள்ளதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com