ஐ.டி. பெண் ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து 10 சவரன் நகைகள், லேப்டாப் திருட்டு

பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்த இளம்பெண் ஒருவர், தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்திற்கு வந்துள்ளார்.
தங்க நகைகள் திருட்டு.
Published on: 

தூத்துக்குடி,

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவைக் காண வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து, 10 சவரன் நகைகள், லேப்டாப்பை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் ஐ.டி. ஊழியர்

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், டென்நேரு காஞ்சிபாடு பகுதியைச் சேர்ந்த ரவிசந்த் என்பவரது மகள் சாய்பிரியங்கா (வயது 26). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்திற்கு வந்துள்ளார்.

கார் கண்ணாடி உடைப்பு

நேற்று மாலை 5.30 மணியளவில் கருங்காலி அம்மன் கோவில் தெரு அருகே உள்ள ஆரம்பப் பள்ளி அருகில் தனது காரை நிறுத்திவிட்டு, முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு 9 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நகைகள், லேப்டாப் திருட்டு

மேலும் காரில் இருந்த 2 தங்க சங்கிலிகள், 2 ஜோடி வளையல்கள், 1 ஜோடி கம்மல் உள்ளிட்ட மொத்தம் 10 சவரன் நகைகள் மற்றும் 1 லேப்டாப் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாய் பிரியங்கா குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com