ஐ.டி.ஐ. மாணவன் தற்கொலை

ஐ.டி.ஐ. மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.டி.ஐ. மாணவன் தற்கொலை
Published on

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் அருகே உள்ள கண்டிலான் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 16). இவர் முதுகுளத்தூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் கண்டிலான் கிராமத்தை சேர்ந்த புவனேஷ் கண்ணன் என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த மாதம் 21-ந் தேதி புவனேஷ் கண்ணன் விளங்குளத்தூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பன் இறந்த துக்கம் தாங்காமல் விரக்தி அடைந்த லட்சுமணன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com