ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி அப்ரண்டீஸ் ஷிப் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகின்றது.

இந்த முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் என்.ஏ.சி சான்றிதழ் பெற்று பயனடையலாம். மேலும் இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள திருவள்ளூரில் உள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9499055663, 8778452515 மற்றும் 9444139373 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com