வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் வரை கால அவகாசம்: மத்திய நிதித்துறை உத்தரவு

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் வரை கால அவகாசம் வழங்கி மத்திய நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் வரை கால அவகாசம்: மத்திய நிதித்துறை உத்தரவு
Published on

சென்னை,

வருமான வரித்துறைக்கு ஒவ்வொருவரும் நிதி ஆண்டு தோறும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் கடந்த, 2018-2019-ம் நிதியாண்டுக்கான, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019 ஏப்ரல் மாதம் தொடங்கியது.

ஆண்டுக்கு, ரூ.2 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018 முதல் கட்டாயமாக்கப்பட்டது.

2018-2019-ம் நிதியாண்டுக்கான, அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் சிக்கல்களை கருத்தில் கொண்டு நவம்பர் 30-ந்தேதி வரை, தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மத்திய நிதித்துறையின் உயர் அதிகாரி ஆர்.ராஜராஜேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com