"ரேசன் கடைகளில் கைரேகைக்கு பதில் கருவிழி பதிவு" - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கைரேகைக்கு பதில் கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
"ரேசன் கடைகளில் கைரேகைக்கு பதில் கருவிழி பதிவு" - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
Published on

மதுரை,

ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கண் கருவிழி கருவி மக்களுக்கு பயன்தரும் வகையில் இருந்தால் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'வயல் வெளியில் வேலை பார்ப்பதால் சிலரது கைரேகைகள் பதிவாகுவதில்லை. இதனால் அவர்கள் பொருள் வாங்குவது கடினமானதாக இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி மூலமாக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலும் கண் கருவிழி மூலம் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் முறையை அறிமுகம் செய்ய உள்ளோம். மக்களுக்கு அது பயன்தரும் வகையில் இருந்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் கண் கருவிழி மூலம் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com