

சென்னை,
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மண்டலத்திற்கான கூடுதல் தலைமை இயக்குநராக ஜெ. காமராஜ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இம்மண்டலத்திற்கான கூடுதல் பத்திரிகை தலைமை பதிவாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.நெடிய அனுபவம் கொண்ட அதிகாரி இந்திய தகவல் பணியின் 2008-ம் ஆண்டு பிரிவு அதிகாரியான ஜெ. காமராஜ், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் மிக்கவர் ஆவார்.
அவரது பணிக் காலம் பின்வருமாறு:-
2008–2010: இந்திய ரெயில்வே போக்குவரத்து பணியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
2011: புதுடெல்லி ஆகாசவாணியின் செய்திப் பிரிவில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
2013: புதுடெல்லி டிடி நியூஸ் தொலைக்காட்சியின் துணை இயக்குநராக பொறுப்பேற்றார்.
2014–2016: டிடி தமிழ் தொலைக்காட்சியில் துணை இயக்குநராக இணைந்தார்.
2016–2018: டிடி தமிழ் செய்திப் பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்தார்.
2018–2020: புதுடெல்லி ஆகாசவாணி செய்தி பிரிவின் இணை இயக்குநராக பணியாற்றினார்.
2020–2021: சென்னை மத்திய மக்கள் தொடர்பகத்தின் மண்டல இணை இயக்குநராக பொறுப்பேற்றார்.
2021–2024: சென்னை மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநராகப் பதவி வகித்தார்.
2024–2025: சென்னை ஆகாசவாணியின் மண்டல செய்தி பிரிவு இயக்குநராக பணியாற்றினார்.
2025 (ஜூலை) முதல்: மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநராக மீண்டும் இணைந்து பணியாற்றி வந்தார். தற்போது கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ள ஜெ. காமராஜ், இன்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்தில் தனது புதிய பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார்.
காமராஜருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.