

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தனி செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் பிறப்பித்துள்ளார்.
இவருக்கான பணிக்கான நிபந்தனைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும் என்று இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் திரையுலகில் இருந்தபோது அவருடைய மேலாளராக ஜெகதீஷ் பழனிசாமி பணியாற்றினார். விஜய் அரசியலில் இறங்கியவுடன் அவருடைய உதவியாளர் போல் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.