மோகனூர் அருகேகோவில் கலசம் திருட முயன்ற வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை

மோகனூர் அருகேகோவில் கலசம் திருட முயன்ற வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை
Published on

மோகனூர் அடுத்த வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் சாலை அன்பு நகரில் உள்ள வேம்படியான் கருப்பண்ண கோவிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஒருவர் கோபுர கலசத்தை பெயர்த்து திருட முயன்றபோது பொதுமக்களிடம் பிடிபட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்மங்கலம் புதுவாங்காலயம் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 24) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் செல்வராஜூக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேபோல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட மேலும் 3 பேரை விடுதலை செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com