வாலிபருக்கு சிறை தண்டனை

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வாலிபருக்கு சிறை தண்டனை
Published on

கொடைக்கானல் தாலுகா அடுக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 30). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர், ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ராஜாவுக்கு இந்திய தண்டனை சட்டம் 450-ன் (அத்துமீறுதல்) கீழ் 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், 376-ன் (பலாத்காரம்) கீழ் 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், 354 பி-ன் (தாக்குதல்) கீழ் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com