ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரையில் 4-வது நாளாக இன்றும் மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரையில் 4-வது நாளாக இன்றும் மாணவர்கள், பொதுமக்களின் கலந்து கொண்ட பேரணி நடந்தது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மதுரையில் 4-வது நாளாக இன்றும் மாணவர்கள் போராட்டம்
Published on

மதுரை,

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். இவ்விளை யாட்டைகாண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எராள மானோர்கூட ஆர்வமாக வருவதுண்டு. இந்நிலையில் இவ்விளை யாட்டுக்கு கடந்த 2 வருடமாக தடை இருப்பதால், ஜல்லிக் கட்டு ஆர்வலர்கள், மாடு வளர்ப்போர், வீரர்கள் மற் றும் பொதுமக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

இந்த ஆண்டாவது நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல் வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாணவ-மாணவிகள் பொதுமக்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மதுரை, சென்னை ஆகிய பகுதிகளில் மாணவர்கள் கொந்தளித்துள்ளனர்.

மதுரையில் கடந்த 3 நாட்களாக பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல் போன்ற போராட்டங்களை நடத்தினர். நேற்று சட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு கல்லூரி மாணவர் கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் தமுக்கம் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பனகல்பார்க் வழியாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். கலெக் டர் அலுவலகம் அருகே வந்ததும் குப்பலாக தடுப்பு களை தள்ளி விட்டு உள்ளே நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாது காப்பிற்கு நின்ற கொண் டிருந்த போலீசார் மாணவர் களை தடுத்தனர்.

இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது. சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டு கலெக்டரை சந்தித்து பேசிய பின்னர் கலைந்து சென்ற னர்.
இதேபோல் மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் உள்பட 60 கிராமங்களில் கடையடைத்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று 4-வது நாளாக மாண வர்கள் மட்டும் அல்லா மல் பொதுமக்களும் போராட் டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்திற்கு பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்ததை தொடர்ந்து இன்று காலை ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப் பினர் இந்த பேரணி யில் ஈடுபட்டனர். தமுக்கம் மைதானத்தில் இருந்து புறப்பட்ட இப் பேரணி காந்திமியூசியம், சட்டக்கல்லூரி வழியாக ரேஸ்கோர்ஸ் மைதானத் திற்கு சென்றது பேரணியில் கலந்து கொண்ட பல மாணவ- மாணவிகள் கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு சென்றனர். அப்போது தடைசெய் தடைசெய் பீட்டா அமைப் பை தடைசெய் மத்திய மாநில அரசுகளே ஜல்லிக் கட்டை நடத்த நடவடிக்கை எடு என்று கோஷமிட்டுக் கொணடு சென்றனர்.

இப்பேரணியையொட்டி தமுக்கம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com