

நன்னிலம்:
நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. பேரளம் உள்வட்ட கிராமங்களில் உள்ள பில்லூர் கொல்லுமாங்குடி, கீரனூர், கூத்தனூர், அன்னதானபுரம், காலியாக்குடி, நெடுங்குளம், முகுந்தனூர், திருக்கொட்டாரம், வேலங்குடி, கடகம், தலையூர், சிறுபுலியூர், பாவட்டக்குடி, போழக்குடி, திருமீயச்சூர் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை வழங்கினர். இதில் பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஜமாபந்தியில் நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், தலைமையிடத்து துணை தாசில்தார் கருணாமூர்த்தி, பேரளம் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.