

தாம்பரம், பல்லாவரம் தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, குரோம்பேட்டை, ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் தாம்பரம், பல்லாவரம் தொகுதியை சேர்ந்த ஏராளமான முதியவர்கள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குறைகளை மனுவாக வழங்கினர்.
இதில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை விரைவாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் மனுக்கள் வழங்கி கோரிக்கை விடுத்தனர். இதில் பல மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.