முதல் அமைச்சர் விஜயுடன் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட்நாராயணன் சந்திப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
முதல் அமைச்சர்  விஜயுடன் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட்நாராயணன் சந்திப்பு
Published on

விஜய் நடித்துள்ள கடைசி படம் ‘ஜனநாயகன்’. பொங்கலுக்கு முன்பாக அதாவது, கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், இப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இதனால் படத்தின் ஓடிடி உரிமையும் ரத்து செய்யப்பட்டது. மேலும், படமும் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் சிக்கலில் இருந்தனர்.

தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், தணிக்கை சான்றிதழை விரைவாக பெற்று படத்தை திரையிட ஜனநாயகன் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், முதல்வரும் ஜனநாயகன் பட ஹீரோவுமான விஜய்யை படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்நாராயணா சந்தித்து பேசினார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com