'ஜனநாயகன்' டிக்கெட் சர்ச்சை... ரூ.200 டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.700 கட்டணம்

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு திடீரென கூடுதல் தொகை செலுத்துமாறு தகவல் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'ஜனநாயகன்' டிக்கெட் சர்ச்சை... ரூ.200 டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.700 கட்டணம்
Published on

தஞ்சை,

தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் வேகமாக விற்பனையாகி வருகின்றன.

ரூ.200 டிக்கெட்டு.. திடீர் கட்டண உயர்வு

தஞ்சை மாநகரில் மட்டும் 4 திரையரங்குகளில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகிறது. இதற்காக ரசிகர்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் ரூ.200 கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு, நேற்று வாட்ஸ்-அப் மூலம் புதிய தகவல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை கியூஆர் (QR) கோடு மூலம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு திடீரென கூடுதல் தொகை செலுத்துமாறு தகவல் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட திரையரங்கின் நடவடிக்கை குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com