ஜனவரி 31: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பின் முழு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரமாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது குறையத் தொடங்கி உள்ளது.

இதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,45,220 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 31,09,526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 25,056 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 20 பேர் (அரசு மருத்துவமனை - 13, தனியார் மருத்துவமனை - 7) உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 37,564 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 2,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7,32,387 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவையில் 2,456 பேருக்கும், செங்கல்பட்டில் 1,430 பேருக்கும், திருப்பூரில் 1,425 பேருக்கும், சேலத்தில் 1,101பேருக்கும், ஈரோட்டில் 1,070 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6,17,54,673 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,30,457 கொரோனா மாதிரிகள் பரிசேதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 1,98,130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 19,51,527 பேர் ஆண்கள் (இன்று-11,481 பேர்), 13,93,655 பேர் பெண்கள் (இன்று-7,799 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com