உலகம் நன்மை பெற வேண்டி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் வழிபாடு

உலகம் நன்மை பெற வேண்டி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
உலகம் நன்மை பெற வேண்டி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் வழிபாடு
Published on

விருத்தாசலம், 

ஜப்பான் நாட்டை சேர்ந்த சிவ பக்தர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிவா ஆதீனம் பாலகும்ப குருமணி தலைமையில் கடந்த 18-ந் தேதி பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் நடந்த போகர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வந்தனர். பின்னர் அவர்கள் உலகம் நன்மை பெறவேண்டி தொடர்ச்சியாக 50 கோவில்களில் யாகம் நடத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதன்படி சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக ஜப்பான் நாட்டு பக்தர்கள் நேற்று காலை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தனர். அவர்களை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மாலா தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து உலக நன்மை வேண்டியும் தமிழர்களின் பண்பாடு, சித்தர்களின் நெறிமுறை, தமிழ் ஆன்மிகம், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றை ஜப்பான் நாட்டில் பரப்புவதற்காக தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் பழனி ஆதீனம், புலிப்பாணி ஆசிரமம் சார்பில் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் ஜப்பான் நாட்டு பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டதுடன், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com