

திருமங்கலம்,
திருமங்கலத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திருமங்கலம், கள் ளிக்குடி தாலுகா பகுதிகளில் இருந்து சின்ன உலகாணி, மைக்குடி கூடக்கோவில், உள்பட 50-க் கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மல்லி கைப்பூ சாகுபடி செய்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் தங்களு டைய வாழ்வாதாரமாக பூ சாகுபடி செய்து விற்பனை செய்து வருகின்றனர். திருமங்கலம் பூ மார்க்கெட்டில் விவசாயிகள் தங்கள் விளைவித்த பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இம்மாதம் முழுவதும் மல்லிகைப்பூவின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நறுமண தொழிற்சாலைக்கு கிலோ ரூ.200-க்கு அனுப்பும் அவல நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு மல்லிகைப்பூ கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஆனி மாதம் என்பதால் கோவில் திருவிழாக்கள் மற்றும் திரும ணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கூட நடைபெறாததால் பூக்கள் மலைபோல் குவிக்கப்பட்டு விற்பனையாகாமல் உள்ளதாக வியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பூக்கள் பறிக்கும் கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மற்ற பூக்களான ரோஜாப்பூ. கனகாம்பரம், பட்டு ரோஸ், செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் வரத்து குறைவானாலும், அதனுடைய விளையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.